விஜய் தங்களை எதிரியாகக் கருதினாலும், தங்களுக்கு திமுக மட்டுமே பிரதான எதிரி என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் எங்களை எதிரியாகப் பார்ப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்றும், ஆனால் தங்களைப் பொறுத்தவரை திமுகவின் ஊழல் ஆட்சியை அகற்றுவதே முதல் இலக்கு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியில் செல்வாக்குடன் இருந்த கே.ஏ. செங்கோட்டையனை போன்ற மூத்த தலைவர்களைத் தன் பக்கம் வைத்துக் கொண்டு, அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் விமர்சிப்பது நகைப்புக்குரியது என தினகரன் சாடியுள்ளார் . எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களைச் சொன்னால் மட்டும் அவர்களின் வாக்கு வங்கியைப் பெற்றுவிட முடியாது என்றும், அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் விஜய்யின் பின்னால் செல்ல மாட்டார்கள் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார் .
