தேதி குறித்த விஜய்… தமிழகத்தின் 234 தொகுதிகளிலும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

By Soundarya on மாசி 3, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர், தங்களின் விருப்ப மனுக்களைப் பிப்ரவரி 6-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். பிப்ரவரி 10-ம் தேதி முதல் 15-ம் தேதி மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் முழுமையாக நிறைவேற்ற முடியும் என இந்த அறிவிப்பில் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, முதற்கட்டமாக வேட்பாளர் தேர்வுப் பணிகளைத் தவெக தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.