வெடிக்கும் மோதல்..! எல்லா பிரச்சினைக்கும் EPS மட்டுமே காரணம்… செங்கோட்டையன் பரபரப்பு குற்றசாட்டு..!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக செங்கோட்டையன் கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் அதிகாரத்தில் இருக்கிறேன் என்ற மனநிலையில் எடப்பாடி கட்சியை அழிக்கிறார் என செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தன்னிடம் எந்த விளக்கத்தையும் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கினார். அவரால் பாதிக்கப்படுவது அதிமுக என்ற மக்கள் இயக்கமும், கோடான கோடித் தொண்டர்களும்தான். அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லாமல் போனதற்கு EPS-ன் மனநிலை மட்டுமே காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.