BIG BREAKING: இபிஎஸ்-க்கு ஷாக்… சற்றுமுன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த செங்கோட்டையன்… அதிமுகவில் அடுத்த பரபரப்பு..!

By Nanthini on புரட்டாதி 9, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதன் எதிரொலியாக செங்கோட்டையன் இபிஎஸ்-க்கு எதிராக சமீபத்தில் குரல் எழுப்பியதால் அவரை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டைய நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக செங்கோட்டையன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் தற்போதைய தமிழக அரசியல் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அனைவரும் ஒன்றிணைைய வேண்டும், இயக்கம் வலுப்பெற வேண்டும் என கருத்துக்களை முன்வைத்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.