ஈரோட்டில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரைக் கூட்டத்தில் கே.ஏ. செங்கோட்டையன் உரையாற்றி வருகிறார். அதில் “விஜய் அவர்கள் மக்களுக்காகவே உழைக்க வந்திருக்கும் உண்மையான தலைவர்” என்று செங்கோட்டையன் தனது உரையில் புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில், “ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வருமானம் தரக்கூடிய சினிமா வாழ்க்கையைத் துறந்துவிட்டு, மக்களுக்காகச் சேவையாற்ற விஜய் வந்துள்ளார்.
ஒரு சிறந்த தலைவர் வேண்டும் என்ற தமிழக மக்களின் நீண்டகாலக் கனவு தற்போது நனவாகியுள்ளது. வரும் காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்யப்போவது ‘புரட்சித் தளபதி’ விஜய் தான்” என்று மிகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
