ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரைக் கூட்டத்தில் கே.ஏ. செங்கோட்டையன் உரையாற்றி வருகிறார். அதில் “விஜய் அவர்கள் மக்களுக்காகவே உழைக்க வந்திருக்கும் உண்மையான தலைவர்” என்று செங்கோட்டையன் தனது உரையில் புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில், “ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வருமானம் தரக்கூடிய சினிமா வாழ்க்கையைத் துறந்துவிட்டு, மக்களுக்காகச் சேவையாற்ற விஜய் வந்துள்ளார்.
234 தொகுதியிலும் விஜய் கை காட்டுபவர்தான் சட்டமன்ற உறுப்பினர். நாளை தமிழகத்தை ஆளப்போவது விஜய்தான். நல்ல தலைவர் தேவை என்ற மக்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது’ என்று கூறியுள்ளார்.
