அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், கடந்த நவம்பர் 27, அன்று தவெகவில் இணைந்தார். அவருக்கு தவெகவின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனைத் தொடர்ந்து, நாஞ்சில் சம்பத் டிசம்பர் 5, அன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவருக்கு பரப்புரைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் ஒரே கட்சியில் இணைந்த நிலையில், அவர்கள் சந்தித்துக்கொண்டனர். இது தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகின்றன
