கோவையில் மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் செம்மொழிப் பூங்கா அமைக்க கடந்த 2023 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிக்காக முதலில் 167.25 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 47 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் செம்மொழிப் பூங்காவை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் செம்மொழி பூங்காவில் நடைபெறும் பணிகளை அமைச்சர் கே என் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்த மாநகராட்சி ஊழியர்களுக்கு உணவு பட்டாளம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த உணவுகளை மாநகராட்சியில் குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு வந்து விநியோகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகரில் சேதாரமாகும் குப்பை, ஓட்டல் கழிவுகள் அள்ளும் குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்து உள்ளனர்.
இது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை காட்டியதாகவும் கிருமிகள் மூலமாக நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் தங்களுடைய குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள பிரச்சனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் தற்போது இதுபோன்று குப்பை வண்டியில் கொண்டு வந்து உணவு வழங்கப்பட்டது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…