செம்பருத்தி சீரியல் ஷபானா நடிப்பில் வெளியாகும் புதிய சீரியல்…. சீரியல் ஹீரோ இவர்தானா…ஆர்வத்தில் ரசிகர்கள்….

By Begam

Updated on:

வீட்டில் உள்ள குடும்ப பெண்கள் பொழுதுபோக்கிற்காக பார்க்கும் நிகழ்ச்சிகள் ஒன்று  சீரியல். ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பலவிதமான சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஒரு சில சீரியல் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறது.

   

அதுபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ‘செம்பருத்தி’. இந்த சீரியல் ஆயிரம எபிசோடுகளை  தாண்டி சாதனை படைத்தது. தற்பொழுது இந்த சீரியல் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலின் ஹீரோயின் ஷபானா வேறொரு சீரியலுக்கு கமிட்டாகி உள்ளதாக  தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். செம்பருத்தி சீரியல் முடிந்ததை அடுத்து இவர் சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் கமிட்டாகி உள்ளதாக  கூறப்படுகிறது. இதில் அவருக்கு ஜோடியாக  காவியாஞ்சலி சீரியல் பிரபலம் பவண் நடிக்க உள்ளாராம். வாழ்த்துக்கள் ஷபானா உங்க புதிய சீரியலுக்காக ….