யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! திமுகவில் இணையும் செல்வப்பெருந்தகை.? அரசியல் வட்டாரத்தில் ஒரே பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 27, 2026

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே. செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, விரைவில் திமுகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது அவருக்கு உடன்பாடு இல்லை என்றும், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீது அவர் வைக்கும் விமர்சனங்கள் தற்பொழுது பெரும் கவனம் பெற்றுள்ளதாகவும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமீபத்தில் செல்வப்பெருந்தகையின் இல்ல நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் திரளாகக் கலந்துகொண்ட நிலையில், முதல்வர் விஜய் வாழ்த்துச் செய்தி கூட அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்து, தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய செல்வப்பெருந்தகை விருப்பம் தெரிவித்துள்ள சூழலில், இந்த அரசியல் மாற்றம் குறித்த விவாதங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.