தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி தரமான ‘ஸ்கெட்ச்’… யார் அந்த சுரேஷ்குமார்…? 3 ஐபோன் கொடுத்து சமாளித்த ‘கோல்டுமேன்’ போலீசில் சிக்கியது எப்படி…?

By Swetha on ஆனி 27, 2026

Spread the love

ஹைதராபாத் ஓல்டு சிட்டி பகுதியைச் சேர்ந்த பல்லபு சுரேஷ்குமார் என்பவர், எப்போதும் தனது உடலில் அதிகப்படியான தங்க நகைகளை அணிந்து கொண்டு வலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவருடைய இந்த ஆடம்பரமான தோற்றத்தைக் கண்டு ஏமாந்த பலரிடம், அவர் பல்வேறு காரணங்களைக் கூறி பணத்தைப் பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பணத்தைத் திரும்பக் கேட்டபோது, சுரேஷ்குமார் மழுப்பலாக ஏதேதோ காரணங்களைக் கூறி காலத்தைக் கடத்தியுள்ளார். பின்னர் அவர்களைச் சமாதானம் செய்வதற்காக 3 ஐபோன்களையும், 20 லட்ச ரூபாய்க்கான வங்கிப் காசோலையையும் அவர்களிடம் கொடுத்து தற்காலிகமாகச் சமாளித்து அனுப்பியுள்ளார்.

   

இருப்பினும், அவர் கொடுத்த காசோலை மற்றும் வாக்குறுதிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான பணம் கிடைக்கவில்லை. அந்த வகையில் சுரேஷ்குமார் தங்களை நம்பவைத்து சுமார் ரூ.32 லட்சம் வரை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.