இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், டிக் டாக் போன்ற சமூக வளைத்தளங்களில் வைரலாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இளைஞர்களிடையே ஒரு பைத்தியமாகவே மாறிவருகிறது. ஒரு செல்பி மூலம், 100 லைக் கிடைக்கும் என்ற ஆசை அப்பாவி உயிர்களை பலியாக்கி வருகிறது. “சரியான புகைப்படம்” என்ற தேடல் சிலருக்கு நினைவுகளை கொடுத்தாலும், பலருக்கு உயிரிழப்பை தருகிறது.
மார்ச் 2014ஆம் முதல் மே 2025 ஆம் வரை உலகளாவிய செல்பி தொடர்பான செய்திகளை ஆராய்ந்து வந்த “தி பார்பர் சட்ட நிறுவனம்”, உலக அளவில் நடந்த உயிரிழப்புகளில் 42.1% இந்தியாவில் நடந்துள்ளது என்ற அதிர்ச்சியான உண்மையை தெரிவித்தது. இதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும் இந்தியாவைத் தவிர பிற நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அமெரிக்கா 45 சம்பவங்கள், ரஷ்யா 19 சம்பவங்கள், பாகிஸ்தான் 16 சம்பவங்கள், ஆஸ்திரேலியா 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
கூரைகள், பாறை சரிவுகள், பாலங்கள், உயரமான கட்டிடங்கள் ஆகிய இடங்களில் புகைப்படக்கம் எடுக்க முயன்ற போது பலர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவதாக ரயில் பாதையில் செல்பி எடுக்கும் போது, பலர் திடீரென ரயிலில் பலியாவதை ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
இளைஞர்களின் துணிச்சலான புகைப்படங்கள் அவர்களின் வாழ்க்கை அழித்துவிடக் கூடாது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி, பள்ளிகள், சமூக அமைப்புகள் ஆகியவை முன்வர வேண்டும். ஒரு புகைப்படம் உங்கள் வாழ்வின் இனிமையான தருணங்களை பதிவு செய்வதற்கே, அது சோக நினைவுகளாக மாறாமல் இருக்க, பாதுகாப்பை முதன்மைப்படுத்துவதே உண்மையான திறன்.
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…