“திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் நரகத்துக்கு தான் போவீங்க”…. ‘திருந்துங்க.. இல்லனா சாகட்டும் போ’… வாக்காளர்களை அதிரவைத்த சீமானின் சாபம்…!

By Nanthini on சித்திரை 10, 2026

Spread the love

கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. “இந்த முறையாவது திருந்தி எனக்கு ஓட்டு போடுங்கள், உங்களுக்கு நல்ல புத்தி கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்ட அவர், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும், மாறாக திமுக அல்லது காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களித்தால் அந்தப் பாவம் மன்னிக்கப்படாமல் மக்கள் நேராக நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்றும் அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும், தன்னை நம்பாதவர்களைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்றும், “என்னை நம்பவில்லை என்றால் சாகட்டும் போ” என விட்டுவிடுவேன் என்றும் அவர் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.