திடீர் திருப்பம்…. 2026-ல் சீமான் போட்டியிடும் தொகுதி…. சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்…!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. இந்த முறை அதிமுக மற்றும் திமுக இடையே இல்லாமல் அதிமுக, திமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம் சீமானும் தற்போது களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருவதால் வாக்குகள் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை என்று சீமான் அறிவித்துவிட்ட நிலையில் தற்போது சீமான் போட்டியிடும் தொகுதி குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி 2026 சட்டமன்றத் தேர்தலில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நடைபெறும் மாவீரர் நாள் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டில் கடலூரிலும் 2021 ஆம் ஆண்டு திருவொற்றியூரிலும் போட்டியிட்டு சீமான் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.