தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம் தமிழர் கட்சி (நாதக) கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இத்தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்ததுடன், எந்தவொரு தொகுதியிலும் 3-வது இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் போனது. பெரும்பாலான தொகுதிகளில் 4-வது இடத்தையே அக்கட்சி பெற்றுள்ளது.
குறிப்பாக, காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியின் 234 வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி, நாதக-வின் வாக்குகளைப் பெருமளவில் பாதித்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
