தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் (SAC) வசிக்கும் வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. மகனின் அரசியல் எழுச்சியைக் கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
ஆங்கில ஊடகத்திற்கு கண்ணீர் மல்கப் பேட்டியளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யை முதல்வராகத் தேர்வு செய்த மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். “மக்களின் நம்பிக்கையை விஜய் நிச்சயம் காப்பாற்றுவார்; அவருக்கு நிறையக் கனவுகள் இருக்கிறது, அதனை அவர் நிறைவேற்றுவார்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட அனைத்துத் தாய்மார்களின் பாதம் தொட்டுத் தனது நன்றியைத் தெரிவிப்பதாக அவர் உருக்கமாகக் கூறினார். விஜய்யின் இந்த அரசியல் வெற்றி, அவரது குடும்பத்தினரிடையே ஒரு உணர்ச்சிகரமான தருணமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
