புதுச்சேரியில் செய்தியாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சுந்தரபாண்டி மற்றும் செல்வம் ஆகியோர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இப்படியான நிலையில் வருகின்ற டிசம்பர் 8ம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற சீமானுக்கு போலீஸ் சமன் அனுப்பியுள்ளது.
