கர்ப்பமான பிள்ளையை என்கிட்ட கூட்டிட்டு வா… ஒரு ரூபாய் செலவில்லாம நானே பிரசவம் பார்க்குறேன்… அதிரடி காட்டிய சீமான்..!!

By Soundarya on சித்திரை 18, 2026

Spread the love

தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழர்கள் எக்காலத்திலும் பிறரைச் சார்ந்து வாழாமல், சுயமரியாதையுடனும் தற்சார்புடனும் வாழ வேண்டும் என்று முழங்கினார். “டேய், பெத்த பிள்ளைக்கு ஒரு மோதிரம் போடக்கூட துப்பில்லாம, எவனோ கொடுக்கிற தாலிக்குத் தங்கத்துக்காகக் கையேந்தி நிக்கிறியே… இதெல்லாம் ஒரு பிழைப்பா? மானங்கெட்ட வாழ்வுடா இது! நான் என்ன சொல்றேன், அண்ணன் சீமான் பேச்சைத் கேளு, தன்மானத்தோட உழைச்சு சம்பாதிச்சு ஒரு பவுன் இல்ல, ஒன்பது பவுன்ல தாலி கட்டுடா. தமிழன் எவன் காலையும் சாராம, தலைநிமிர்ந்து தற்சார்பு வாழ்க்கையை வாழணும். ஊரான் கொடுக்கிறதை வாங்கி உன் பிள்ளைக்குப் போடுறதுக்கு உனக்கு வெட்கமா இல்லையா?

தனியார் ஆஸ்பத்திரிக்குப் போனா மூணு லட்சம் ரூபாயைப் பறிக்கிறானே, அந்தப் பணத்தை மிச்சம் பண்ண வேண்டாமா? நீ கர்ப்பமான உன் பிள்ளையைக் கூட்டிட்டு வா, நானே முன்ன நின்னு ஒரு ரூபாய் செலவில்லாம பிரசவம் பார்க்க வைக்கிறேன். அப்படி மிச்சமாகுற அந்த மூணு லட்சம் ரூபாயை வச்சு, உன் பிள்ளைக்கு மூணு பவுன்ல மோதிரம் போடுடா. அதை விட்டுட்டு ஏன்டா இப்படி இலவசத்துக்காக மானத்தை விட்டுட்டு அலையுறீங்க?” எனத் தனது பாணியில் சீமான் அதிரடியாகப் பேசினார்.