பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டு வரும் நிலையில் பீகாரிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வசிப்பவர்களும் அந்தந்த மாநில தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் செய்து வரும் மாற்றங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக தமிழகத்தில் ஹிந்தி வாக்காளர்களை அதிகரித்து பாஜகவிற்கு ஓட்டு வங்கியை பலப்படுத்தும் முயற்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாக திமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டை வைத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியுள்ளார். அதாவது, “தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவருமே பாஜக வாக்குகள் தான். கோவை தெற்கு பகுதிகளிலும், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் வட இந்தியர்கள் தான் அதிகமாக உள்ளதால் தேர்தலில் அவர்கள் வாக்களித்தால் பாஜக வெற்றி பெறும் நிலைமை உள்ளது. தமிழ்நாட்டை இன்னொரு ஹிந்தி பேசும் மாநிலமாக மாற்ற முயற்சி நடக்கிறது. வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டின் வாக்குரிமை தரக்கூடாது. நான் இருக்கும் வரை அப்படி ஒன்று நடக்கவும் விட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…