தமிழ் சினிமாவில் அலைபாயுதே படம் மூலமாக மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மாதவன். அந்த படம் ஹிட்டாக தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் கதாநாயகர்களில் ஒருவரானார். தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
அலைபாயுதே ஹிட்டானதும் விஜய், அஜித் போன்ற அப்போதைய இளம் ஹீரோக்கள் ஏழெட்டு ஆண்டுகள் போராடி பெற்ற புகழை மாதவன் ஒரே படத்தில் பெற்றார். அதையடுத்து அவர் நடித்த மின்னலே, ரன், தம்பி மற்றும் இறுதி சுற்று உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.
ஆனால் இடையில் அவரின் சில திரைப்படங்கள் தோல்வி அடைந்ததால் அவரால் தற்போது மார்க்கெட் உள்ள நடிகராக நிலைக்க முடியவில்லை. ஆனாலும் இன்றளவும் அவர் கதாநாயகனாக தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மாதவனை தம்பி படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய சீமான் அவரின் நடிப்பைப் பற்றி பேசியுள்ளார். அதில் “தம்பி படத்தில் நான் கண்ணே இமைக்காமல் நடிக்க வேண்டும் என்றேன். அதை அப்படியே செய்தான் என் தம்பி மாதவன். அப்படி ஒரு கெட்டிக்காரத்தனமான நடிகன். ஆனால் நடனம் ஆடவேண்டும் என்று சொன்னால் மட்டும் அவர் கோபமாகிவிடுவான்.
எல்லோரும்தான் அதை சொல்கிறார்கள் என்றால் நீங்களுமா அண்ணா? என்பான். வேறு வழியில்லை ஆடிதான் ஆகவேண்டும் என்று சொன்னால் வேண்டா வெறுப்பாக ஆடுவான். நடனம் என்றால் மட்டும் அவனுக்கு நஞ்சாகிவிடும். தம்பி படத்துக்குப் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து பகலவன் படத்தைதான் பண்ணிருக்க வேண்டும். ஆனால் அந்த கதையை கேட்டு அவன் பயந்துவிட்டான். அந்த படம் வந்திருந்தால் என் பாதை வேறு மாதிரி ஆகிருக்கும்” எனக் கூறியுள்ளார்.
தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…
தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…
வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…