முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நாம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. மக்கள் தொகையில் சமநிலை பேணுவதற்கு ஒவ்வொரு குடும்பமும் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் இருக்கக் கூடாது. இதை அனைவரும் ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து பேசிய சீமான், “மக்கள் தொகைக்கு ஏற்ப எல்லாவற்றிலும் கட்டுப்பாடு கொண்டுவர முடியாது. நான் ஆறு பிள்ளைகளை கூட பெற்றுக் கொள்வேன். இனி இருவருக்கு அறுவரா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று நீங்கள் சொல்லக்கூடாது என்றும் சாடியுள்ளார்.
