“விஜய் ஒரு பகடைக்காய்” ஆட்டம் காட்டும் ராகுல்… மௌனம் காக்கும் ஸ்டாலின்… காங்கிரஸின் டீலிங்கைத் தோலுரித்து விளாசும் சீமான்..!!

By Soundarya on மாசி 11, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் நிலவி வரும் சலசலப்புகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்டு வருகிறது. “விஜய் (தவெக) கட்சிக்குச் சென்றுவிடுவோம்” என்று பயமுறுத்தி, நடிகர் விஜய்யை ஒரு பேரம் பேசும் கருவியாக காங்கிரஸ் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பது குறித்து நடிகர் விஜய் தன்னிடமே கேட்டதாகவும், அதற்கு “காங்கிரஸை சேர்த்துக்கொண்டு மக்களிடம் என்ன அரசியல் பேசுவீர்கள்?” என்று தான் கேள்வி எழுப்பியதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். “ஆட்சியில் பங்கு” என்று காங்கிரஸ் கேட்டபோதே அவர்களைக் கூட்டணியை விட்டு வெளியேற்றி இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அவர்கள் இப்போது அமைதியாக இருந்திருப்பார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.