2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவி வரும் சலசலப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பூ “இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனாதையாகத் தனித்து நிற்கப் போகிறது” என்று விமர்சித்துள்ளார். திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் காங்கிரஸ் வரும் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து விடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தற்போதைய சூழலில் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாகவும், அக்கட்சியினர் எதைப் பார்த்தாலும் பயப்படுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதே காலகட்டத்தில், தமிழகத்தில் திமுகவை வீழ்த்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பாஜக – அதிமுக கூட்டணியுடன் இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
