“பைத்தியக்காரப் பயல்களா… வாக்கு மட்டும் நீயாவா குத்திக்கிட்ட?”…. மேடையில் எகிறிய சீமான்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்….!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் வழக்கம்போல் தனது ஆவேசமான உரையாடலால் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். திரள்நிதியைப் பயன்படுத்தி சொகுசு கார் வாங்கியதாக எழுந்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய சொற்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன. “மக்களிடம் நிதி கேட்பதில் என்ன தவறு? தேர்தலில் நீங்கள் மக்களிடம் வாக்கு கேட்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பிய அவர், தன் மீதான விமர்சனங்களை மிகக் கடுமையான வார்த்தைகளால் எதிர்கொண்டார்.

தமிழின உணர்வையும் மொழிப் பற்றையும் முதன்மைப்படுத்திப் பேசிய சீமான், தமிழ் மொழிதான் தமிழனின் அடையாளம், முகவரி மற்றும் அரசியல் என்று வலியுறுத்தினார். நடிகர்களுக்கும் உண்மையான தலைவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மாவீரர்களின் கனவைச் சுமந்து நிற்கும் மானத் தமிழனின் கோட்பாடு சரணடைந்து வாழ்வதை விடச் சண்டையிட்டுச் சாவதே ஆகும் என்றார். சாதி பார்க்காமல் எளிய ஆதி தமிழ் சமூக மக்களுக்குத் தேர்தலில் வாய்ப்பளித்த பெருமை நாம் தமிழர் கட்சியையே சாரும் என்றும் அவர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.

   

தமிழக அரசியலில் புதிதாக நுழைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நேரடியாக விமரிசித்த சீமான், அவரது அரசியல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் மதமும் சாதியும் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். முதலமைச்சரானதும் ‘ஜோசப் விஜய்’ என்று பெயரைப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி, திராவிடக் கட்சிகளைப் போலவே விஜய்யும் வெறும் விளம்பர அரசியலையே முன்னெடுக்கிறார் என்று சாடினார். தவெக ஆட்சி என்பது வெறும் ‘ரீல்ஸ்’ அரசியலே தவிர, மக்களுக்குத் தேவையான ‘ரூல்ஸ்’ அல்ல என்றும் அவர் விமர்சித்தார்.

   

செய்தியாளர்கள் சந்திப்பிலும் பொதுமேடைகளிலும் சீமான் பயன்படுத்தும் கடுமையான சொற்பிரயோகங்கள் தொடர்ந்து விவாதங்களைக் கிளப்பி வருகின்றன. சாக்ரடீஸின் “வாதத்தில் தோற்பவன் அவதூறைக் கையில் எடுப்பான்” என்ற பொன்மொழியை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தன் மீது வீசப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் எதிரிகளின் அவதூறுகளே என்று மறுத்துள்ளார். இருப்பினும், ஒரு முக்கிய அரசியல் தலைவராகப் பொதுவெளியில் பேசும்போது நிதானத்தையும் நாகரிகத்தையும் பேண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.