“வாரத்துல 6 நாள் மனப்பாடம், ஒரு நாள் மட்டும் பிரச்சாரம்”… 10 நிமிஷத்துல உங்களால் என்ன பண்ண முடியும் விஜய்?.. வெளுத்து வாங்கிய சீமான்…!

By Nanthini on புரட்டாதி 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆங்காங்கே தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பற்றி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் விஜயை சரமாரியாக விமர்சித்தார்.

அவர் அளித்த பேட்டியில், விஜய் சனிக்கிழமை மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து விமர்சித்துள்ளார். பாரதியின் ஆறு நாட்களிலும் மனப்பாடம் செய்து அதனை தன்னுடைய ரசிகர்களுக்கு பேசி காட்டுவதற்கு விஜய் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். விஜய் 10 நிமிடம் மட்டுமே தனது பிரச்சாரத்தில் பேச அனுமதி கேட்டதையும் சீமான் விமர்சித்துள்ளார். ஒரு அரசியல் கட்சியின் தலைவரால் 10 நிமிடத்தில் என்ன பேசிவிட முடியும். தங்களுடைய கட்சி கொள்கையை 10 நிமிடங்களில் விளக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

   

மேலும் வேலுநாச்சியார் மற்றும் காமராஜர் ஆகியோரை தன்னுடைய கட்சியின் கொள்கை தலைவர்களாக வைத்திருக்கும் விஜய் அவர்களை பற்றி 10 நிமிடம் பேச முடியுமா. நடிகர் விஜய்யும் நானும் அண்ணன் தம்பி போன்றவர்கள். ஆனால் கட்சி கொள்கை என்று வரும்போது எங்களிடம் முரண்பாடு தோன்றுகிறது. இதற்கு முன்பு கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த போது அவரையும் நாம் தமிழர் கட்சி முந்தி சென்றது. தற்போது விஜய் வந்துள்ளதால் அவரையும் நாங்கள் முந்தி சென்று கொண்டிருப்போம். திமுகவை தங்களுடைய கொள்கை எதிரி என்று கூறும் தமிழக வெற்றிக்கழகம் எந்த அடிப்படையில் கொள்கையில் முரண் என்பதையும் விளக்கி கூற வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.