உத்திரபிரதேசம் மாநிலத்தில் முதலாளியின் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த குணால் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். விவேக் என்பவர் அந்த நிறுவனத்தின் முதலாளியாக இருந்து வந்த நிலையில் குணாலூக்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளரான விவேக்கின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விவேக் பலமுறை கண்டித்த நிலையிலும் குணால் விவேக்கின் மனைவி உடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய நிறுவனத்தின் மற்றொரு ஊழியரான வாஷிம் என்பவர் மூலமாக குணாளை தீர்த்து கட்டுவதற்கு திட்டம் தீட்டிய விவேக் குணாளை தனியாக அழைத்துச் சென்று வாசிம் கொடூரமாக படுகொலை செய்துள்ளார். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விவேக் மற்றும் வாசிம் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
