லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் திரிஷா இணைந்து நடித்த படம் லியோ. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. வருகிற 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது.
படம் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில் லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் லியோ படத்தின் டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர். படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருகின்றனர். அது ஒருபுறம் இருக்க ட்ரெய்லரில் விஜய் ஒரு மோசமான வார்த்தையை பேசியுள்ளார். ஏற்கனவே நான் ரெடி பாடலில் லியோ சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று அந்த பிரச்சனை ஓய்வதற்குள், ட்ரெய்லரில் விஜய் ஒரு மோசமான வார்த்தையை பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் விஜய் பேசிய மோசமான வார்த்தை குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான் அது மோசமான வார்த்தை என்றால் சென்சார் அதிகாரிகள் ஏன் அதனை தூக்கவில்லை. இப்போது ட்ரெய்லர் தான் வந்திருக்கிறது. ஒருவேளை படத்தில் அந்த வார்த்தை வரும்போது ஒலியை மியூட் செய்திருக்கலாம். அதேபோல மயிரு என்பது கெட்ட வார்த்தை என்றால் ஏன் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முடி இல்லை என்றால் ஏன் விக் வைக்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த வீடியோ இதோ..