லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா இணைந்து நடித்த படம் லியோ. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. வருகிற 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது.

படம் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில் லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் லியோ படத்தின் டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர். படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருகின்றனர். அது ஒருபுறம் இருக்க ட்ரெய்லரில் விஜய் ஒரு மோசமான வார்த்தையை பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று கொண்டிருகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜயை தான் கட்டாயப்படுத்தி தான் அந்த வார்த்தையை பேச வைத்ததாக கூறியுள்ளார். விஜய் முதலில் அந்த வார்த்தையை பேச தயக்கம் காட்டியுள்ளார். ஆனால் கதைக்கும், அந்த கதாபாத்திரத்திற்கும் தேவை என்பதால் கட்டாயப்படுத்தி விஜயை அந்த வார்த்தையை பேச வைத்ததாகவும், அதற்கு நானே முழு பொறுப்பு எனவும் லோகேஷ் கூறியுள்ளார்.

