விஜய் டிவியில் இப்போது, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி, கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் பிரச்னைகளை விட அது சார்ந்து வெளியே நடக்கும் சில பிரச்னைகள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் நள்ளிரவில் தாக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னை தாக்கியவர் பிரதீப் குறித்து கேள்வி கேட்டார் என்றாலும், அவரோ, அவரது ஆதரவாளரோ தன்னை தாக்கியதாக வனிதா விஜயகுமார் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. வனிதா தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த பிரதீப் ஆண்டனி, அவருக்கு மேசேஜ் அனுப்பி ஆறுதல் தெரிவித்து இருக்கிறார். உங்கள் மகள் உங்கள் ஆதரவின்றி வெற்றி பெற்று விடுவார் என்றும் கூறியிருக்கிறார். அதாவது தினமும் பிக்பாஸ் குறித்து ரிவ்யூ கொடுத்தும், இதுபோன்று சீன் போட்டும் மகள் ஜோவிகா வெற்றிக்காக வனிதா ரூட் போடுவதாக பலரும் கூறிவரும் நிலையில், பிரதீப்பும் அதுபோன்ற ஒரு அர்த்த்தில் கூறியது மட்டும் வனிதாவை சங்கடப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதீப் ஆண்டனிக்கு வீட்டுக்கு சென்ற போலீசார் அவரிடம் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர். அதாவது, இந்த தாக்குதலில் பிரதீப் ஆண்டனி ஈடுபடவில்லை என்றாலும், இது சார்ந்து யாரேனும் பேசி இருக்கிறார்களா போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள அவரிடம் விசாரித்துள்ளனர். இந்த தகவல் இதுவரை வெளியே வரவில்லை. இதற்கிடையே மற்றொரு தகவலும் வந்துள்ளது. அதாவது வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டது குறித்து சினிமாத்துறை சார்ந்த பலரும், நண்பர்கள் பலரும் வனிதாவிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருபவர், விஜயகுமாரின் நீண்ட கால நண்பரான கமல்ஹாசன், ஒரு போன் செய்து கூட வனிதா விஜயகுமாரிடம் பேசவில்லை. ஒருவேளை, கமலையும் வனிதா விமர்சித்து பேசியதால் ஏற்பட்ட கோபமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…
வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…