BREAKING: மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் கைது… தமிழகத்தில் தொடரும் பரபரப்பு..!!

By Soundarya on மார்கழி 29, 2025

Spread the love
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. சென்னை டி.பி.ஐ (DPI) வளாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்ந்து, இன்று எழிலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து வரும் இந்தப் போராட்டத்தால் சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகள் போராட்டக் களமாக மாறியுள்ளன.
இந்த விவகாரத்தில் இதுவரை 1,046 ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை கடற்கரை சாலை மற்றும் எழிலகம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் மிகுந்த பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க ஆசிரியர்கள் தொடர்ந்து முயன்று வரும் நிலையில், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என ஆசிரியர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.