2வது உலகத் திரைப்பட விழா… பார்வையாளர்கள் 3 நாள் இலவசமாக பார்க்கலாம்…. சூப்பர் அறிவிப்பு….!

By Divyamayakannan on ஆவணி 6, 2025

Spread the love

புதுச்சேரியில் இரண்டாவது உலக திரைப்படத் திருவிழா வரும் 8ஆம்தேதி முதல் 3 நாட்களுக்கு அலையன்ஸ் பிரான்சிஸில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ் பெல்ஜியம் ஸ்பெயின் ஈரான் இந்தி உட்பட மொழிப்படங்கள் திரையிட உள்ளதாகவும். அதோடு, அனுமதி இலவசம் என கூறப்படுகிறது. இரண்டாவது புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து புதுச்சேரியில் இரண்டாவது உலகத் திரைப்பட விழாவில் 2025- வருடம் 8 ,9, மற்றும் 10 தேதிகளில் புதுச்சேரி சுய்ப்ரோன் வீதியில் அமைந்துள்ள அலைன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5.30மணி அளவில் தொடக்க விழா தொடங்க உள்ளது. எடிட்டர் ஸ்ரீகாந்த் பிரசாத் விழாவினை தொடங்க உள்ளார் .தொடக்க திரைப்படமாக டோரி அண்ட் லோகிடா பெல்ஜிய – பிரெஞ்சு டிராமா திரைப்படம் திரையிடப்படும். 9ஆம்தேதி காலை 9.15 மணி ஸ்பெயின் திரைப்படமான ஆப்டர்நூன் ஆப் சாலிடியூட்திரையிடப்பட உள்ளது. நண்பகல் 12 மணிக்கு திரைப்படங்களின் எதிர்காலம் தலைப்பில் எடிட்டர் ஸ்ரீகார் பிரசாத் அவர்களுடன் இயக்குனர் சிவக்குமார் பங்கேற்கும் கலைந்துரையாடலும் நடைபெற உள்ளது.

   

3ஆம் நாளான 10 தேதி காலை 9 மணி இரண்டு நாட்கள் திரையிடப்பட்ட திரைப்படங்களில் குறித்த கருத்து வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம். இதைத்தொடர்ந்து 9.30மணிக்கு அர்ஜென்டினா திரைப்படம் தி டெலின்க்வென்ட்ஸ் திரையிடப்பட உள்ளது. மதியம் 2.15மணிக்கு அமெரிக்கா திரைப்படமான ஏ கம்ப்ளீட் அன்நோன்இடப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு நிறைவு விழா க்கு பின்னர் இறுதித் திரைப்படமாக இந்தி திரைப்படம் சிஸ்டர் மிட்நைட் திரையிட உள்ளது. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, இது ஒவ்வொரு மனிதனின் அங்கமாகவும் உள்ளது சில படம் பார்க்கும் பொழுது நம் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களை உணர்த்தும் அது இன்பமாகவும் துன்பமாகவும் உள்ளது . திரைப்படங்களை பார்த்து ரசிக்க தயாராகுங்கள் அனைவர்க்கும்  அனுமதி இலவசம்  என்று தெரிவித்துள்ளனர்.