மொத்தமாக குறைந்த மருந்துகள் விலை… இனி எல்லா மாத்திரையும் ரொம்ப கம்மி விலை தான்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!

By Srimathi on ஆவணி 6, 2025

Spread the love

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின்படி, ரசாயனம் மற்றும் உர அமைச்சகம் அத்யாவசிய மருந்துகளின் விலையை குறைத்துள்ளது. நீண்ட நாள் நோயாளிகளுக்கு இது பெரும் நிவாரணம் அளிக்கும். டெல்லியில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு ஒன்றில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சில முக்கிய மருந்துகளின் விலையை குறைத்துள்ளது, மத்திய அரசு. இதன்மூலம் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் நிவாரணம் அடைவர் என நம்பப்படுகிறது. இந்த நடவடிக்கையை தேசிய மருந்து விலை நிர்ணய(NPPA) ஆணையத்தால்  நிர்ணயிக்கபட்டது.

குறைந்த விலையில் காய்ச்சல் மருந்து 

   

காய்ச்சல்,உடல் வலி, வீக்கங்களை குறைக்க பயன்படுத்தப்படும்  அசெக்ளோஃபெனாக், பாராசிட்டமால் மற்றும் டிரிப்சின்  கைமோட்ரிப்சின் ஆகிய மருந்துகள் ரூ.13 ஆக குறைக்கப்பட்டுள்ளது.தினந்தோறும் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை குறைக்கவும், மருத்துவ செலவுகளால் சிரமப்படும் எளிய மக்களுக்கு பெரும் உதவியாக அமையும் வகையில் இம் முயற்சி எடுக்கப்பட்டது.

   

நல்ல  தரம் உள்ள மருந்துகள்

 

கேடிலா நிறுவனம் தயாரிக்கும் மருந்து ரூ.15.01 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. கம்ஸ் மருந்துகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் தயாரித்து டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின் விற்பனைக்கு வருகிறது.

குறைந்த விலையில் இதய நோய்

குறைந்த விலையில் இதய நோய் மருந்து இக்காலகட்டத்தில் இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதால்,அட்டோர்வாஸ்டேடின் (40 மி.கி)  மற்றும் க்ளோபிடோகிரெல் (75 மி.கி)  கலந்த மருந்துகளின் விலை ₹25.61 ஆக விலை சரிந்துள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் வைட்டமின் டி குறைபாட்டிற்கான மருந்துகளின் விலை 1 மில்லிக்கு ரூபாய் 31. 77 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

குறைவான விலையில் மருந்து மகிழ்ச்சியில் மக்கள்

அதிகமான விலையில் மருந்துகள் கிடைப்பதால், பலரும் சிகிச்சையை  தவிர்க்கவே நினைக்கிறார்கள். இதனால் நோயின் அபாய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்போது மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பதால் மருத்துவம் எளிமையாக கிடைக்கும். மத்திய அரசின் முடிவாள் மருத்துவ செலவுகளை கட்டுப்படுத்தி, சமூக நலனின் ஒரு புதிய மாற்றம் ஏற்படும். வருங்காலத்தில் பல மருந்துகளின் விளையும் குறைக்கப்படும் என கருதப்படுகிறது. முழுமையான நோயற்ற சமூகத்திற்கான அடித்தளமாக இந்நடவடிக்கை அமையும்.