முதல் மனைவியின் காரணமாக தன்னை கவனிக்காமல் இருந்ததற்காக, தூக்கத்தில் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றதாக இரண்டாவது மனைவியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 29 அன்று நடந்தது, குற்றம் சாட்டப்பட்ட கவிதா (30) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சஞ்சய் குமார் (40) அவரது இரண்டாவது மனைவி கவிதாவால் கொல்லப்பட்டார், என்று காவல் நிலைய அதிகாரி (SHO) தினேஷ் சந்த் பாகல் கூறினார். பாதிக்கப்பட்டவரின் தந்தை போபால் சிங் இந்த குற்றம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். விசாரணையின் போது, சஞ்சய் தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்து கொன்றதாக கவிதா போலீசாரிடம் தெரிவித்தார். மேலும், சஞ்சய் தனது முதல் மனைவியின் காரணமாக தன்னை “புறக்கணித்து வருவதாக” அவர் கூறினார். சஞ்சய் மற்றும் கவிதா 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவரது முதல் மனைவி அவரது சொந்த கிராமமான தந்தா மஜ்ராவில் வசிக்கிறார்.
