புதிய ரேஷன் கார்டு…. தவறான தகவல் கொடுத்து வாங்க போறீங்களா?.. அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெரிஞ்சுக்கோங்க…!

By Srimathi on புரட்டாதி 1, 2025

Spread the love

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு, அன்றாட உணவு தேர்வையை தீர்க்க ரேஷன் கார்டு மூலம் இலவச அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும், தங்களில் கார்டுக்கேற்ப இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் அரசு ஆயிரக்கணக்கான ரூபாயை செலவு செய்கிறது. ஆண்டுதோறும் உணவுப்பொருள் விநியோகத்திற்காகவே கோடி கணக்கில் பட்ஜெட் போடப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் சில பேர் போலியாக புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பித்து வருகின்றனர். இது சட்ட விரோதமான செயல். தவறான முகவரி, தகவல்களை மறைத்தல், கேஸ் சிலிண்டர் இருப்பதை மறைத்து ரேஷன் கார்டு வாங்குதல் போன்றவற்றிற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப்படி தண்டனையும் வழங்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினர் விவரங்களை கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதை மீறி பொய்யான தகவல்களை அளிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அத்துடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.