Connect with us

தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. ரெடியா இருங்க..!

CINEMA

தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. ரெடியா இருங்க..!

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. அதிலும் அவர் பாடிய பாடலே ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கின்றார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

   

 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா, அமெரிக்கா உள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தில் இருந்து முதல் சிங்கள் ஏற்கனவே வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த பாடலை விஜய் தான் பாடியிருந்தார்.

யுவன் சங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. எந்த படத்திலும் இல்லாத வகையில் விஜய் இப்பொழுது இரண்டு பாடல்களை பாடி இருக்கின்றார். இந்நிலையில் இரண்டாவது பாடலை நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

நடிகர் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகாமல் இருக்கின்றது. ஏனென்றால் தற்போது மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய். விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி மாணவர்களுக்கும் சென்ற வருடம் கொடுத்தது போன்றே கல்வி உதவித் தொகை வழங்க இருக்கின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. இதையெல்லாம் முடித்துவிட்டு அடுத்ததாக அவரின் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top