BREAKING: யாரு பெருசுனு அடிச்சி காட்டு…. தவெகவில் அடிதடி, பயங்கர மோதல்….. நள்ளிரவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

By Nanthini on ஆடி 22, 2026

Spread the love

திருவண்ணாமலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காகப் பேனர் வைப்பது தொடர்பான சர்ச்சையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆரணி மாவட்டச் செயலாளர் சத்யா படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேனரில் தன் புகைப்படம் இடம்பெறவில்லை என அதிருப்தியடைந்த ஒன்றிய செயலாளர் ராகவன், சத்யாவுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் திடீரெனக் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த சத்யா உடனடியாகச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.