“அய்யய்யோ… போலீஸ் பாதுகாப்பையும்… மீறி வெடித்த ஆத்திரம்…! சிறுவர் கொலைக் குற்றவாளிக்கு நடுரோட்டில் செருப்படி… புனேயை உலுக்கிய வைரல் காட்சி…!”

By Swetha on ஆடி 22, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பாரதி வித்யாபீட காவல் எல்லைக்குட்பட்ட காத்ராஜ் பகுதியில் சிறுவர்களுக்கு இடையேயான மோதலில் ஒரு சிறுவன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.

வைரலான அந்த வீடியோவில், காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவர்களை வாகனத்தின் முன் பகுதியில் வைத்து அழைத்துச் செல்லும்போது, ஆத்திரமடைந்த பெண் ஒருவர் அந்த சிறுவனைத் தனது செருப்பால் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காவல்துறையினரின் பாதுகாப்பில் இருந்தபோதே இந்தத் தாக்குதல் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

https://twitter.com/VaradBhatkhande/status/2079531875161583748/video/1

   

சிறுவர்களை பொதுவெளியில் காவல்துறையினர் அழைத்துச் சென்ற விதம் மற்றும் பெண் தாக்கிய சம்பவம் குறித்து துணை ஆணையர் மிலிந்த் மோஹிதே தலைமையிலான காவல்துறை தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.