Categories: சினிமா

இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்… அவர் சம்பளத்த விட ஒரு லட்சம் அதிகமாக வாங்கிய திரைக்கதை எழுத்தாளர்கள்- நம்ப முடியாத சாதனை!

Spread the love

இந்தியா முழுவதற்கும் ஒரே சூப்பர் ஸ்டராக 70 மற்றும் 80 களில் விளங்கியவர் நடிகர் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சன் நேரடியாக ஒரு தென்னிந்திய மொழிப் படத்தில் கூட நடித்ததில்லை. ஆனால் அவர் நடித்த ஷோலே உள்ளிட்ட படங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

75 ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படம் தமிழ்நாட்டில் இந்தியிலேயே வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேல் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. தமிழ்ப் படங்களின் வசூலை எல்லாம் முறியடித்துள்ளது. அப்படி இந்த படம் ஓடியதற்கு அமிதாப் பச்சன் மட்டும் காரணம் இல்லை. இன்னும் இரண்டு பேரும் முக்கியக் காரணம். அவர்கள்தான் திரைக்கதை ஆசிரியர்களான சலீம் கான் மற்றும் ஜாவேத் அக்தர்.

இவர்கள்தான் 70 களில் ஆங்ரி யங் மேன் –(கோபக்கார இளைஞன்) எனும் ஹீரோவை இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன்னர் வரை இந்திய சினிமாவின் கதாநாயகன் காதல் நாயகன் ஆகவும் மென்மையான மனம் கொண்டவனாகவும், எந்தவிதமான புரட்சிகர சிந்தனைகளும் இல்லாதவனாக இருப்பான். ஆனால் நாடு அப்போதிருந்த அரசியல் சூழலால் இளைஞர்கள் மத்தியில் இருந்த நெருப்பை தங்கள் கதாபாத்திரமாக உருவாக்கினார் சலிம் – ஜாவேத்.

அப்படி உருவாக்கிய பல பாத்திரங்களில் அமிதாப் பச்சன் நடித்தார். அப்படிப்பட்ட இந்த பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு விஜய் என்றுதான் அவர்கள் பெயர் வைத்தார்கள். இப்படி அவர்கள் உருவாக்கிய திரைக்கதைகள் அமிதாப் பச்சனை சூப்பர் ஸ்டாராக ஆக்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களையும் சூப்பர் ஸ்டார் எழுத்தாளர்களாக்கியது.

எப்படி என்றால் ஒரு கட்டத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக இருந்த அமிதாப் பச்சன், ஒரு படத்துக்கு 20 லட்சம் சம்பளம் வாங்கினார்கள் என்றால் தங்களுக்கு 21 லட்சம் ரூபாய் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் டிமாண்ட் செய்யும் அளவுக்கு அவர்களின் மார்க்கெட் இருந்துள்ளது. கேட்டது மட்டும் இல்லாமல் அப்படி பெறவும் செய்துள்ளார்கள் என்பதுதான் இதில்  வியப்பான விஷயம்.

vinoth

Recent Posts

சேலத்தை உலுக்கிய கொடூரம்…. குடிநீர் தொட்டியில் துண்டு துண்டாக சாக்கு மூட்டை… பின்னணியில் காதலர்கள் போட்ட பகீர் பிளான்…. வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை….!

சேலம் அரிசிபாளையத்தில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்…

54 seconds ago

“கறிக்குழம்பு வைக்கலையா?”…. ஒரு கிண்ணம் குழம்புக்காக மனைவியை உயிரோடு முடித்த கணவன்… நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்….!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர், கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில்…

5 minutes ago

“எனக்கு மன அமைதியைத் தந்தது அதுதான்…” பிரிவின் வலியை கடக்க உதவிய பகவத் கீதை… உருக்கமாகப் பேசிய ‘நாகினி’ மௌனி ராய்…!!

நாகினி' சீரியல் மற்றும் 'கே.ஜி.எஃப்', 'விஸ்வாம்பரா' போன்ற படங்கள் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மௌனி ராய், கடந்த 2022-ஆம்…

10 minutes ago

“ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு ‘ரெட் கார்டு’…. அடுத்தடுத்து தூக்கப்பட்ட திட்டங்கள்… தவெக அரசின் மாஸ்டர் பிளான் இதோ….!

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து…

12 minutes ago

ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவால் அதிரும் திமுக…. 76 பிரதிநிதிகள் யார் யார் தெரியுமா?…. அதிர்ச்சியில் உறைந்த நிர்வாகிகள்….!

திமுகவை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புப் பிரதிநிதிகள் இன்று முதல் தங்களது களப்பணிகளைத் தொடங்குகின்றனர். கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்…

28 minutes ago

“கையில் வீச்சு கத்தியுடன் மாஸ் போஸ்…” சித்தா பட இயக்குநருடன் கைகோர்க்கும் உலக நாயகன்… அடுத்த மெகா ஹிட்டுக்குத் தயாராகும் கமல்ஹாசன்…!!

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான 'இந்தியன் 2' மற்றும் 'தக் லைஃப்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல்…

31 minutes ago