#image_title
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார். 2000 களின் இறுதிவரை அவரது படங்கள் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
80 களில் பாரதிராஜா ஒரு ட்ரண்ட் செட்டராக இருந்த நிலையில் 90 களில் சில சறுக்கல்களை சந்தித்தார். 90 களின் தொடக்கத்தில் அவர் எடுத்த கேப்டன் மகன், நாடோடித்தென்றல் மற்றும் என் உயிர் தோழன் ஆகிய படங்கள் தோல்வி அடைய ஆரம்பித்தன. அதனால் அவர் இனிமேல் அவ்வளவுதான் என்றெல்லாம் பேச்சுகள் எழ ஆரம்பித்தன. அதுமட்டுமில்லாமல் அப்போதுதான் அவர் இளையராஜாவையும் பிரிந்தார்.
அதே நேரத்தில் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த கலைப்புலி தாணு தன்னுடைய முந்தைய படங்களால் கடனில் மூழ்கியிருந்தார். அப்போதுதான் இருவரும் இணைந்து கிழக்குச் சீமையிலே படத்தைத் தொடங்கியுள்ளனர். முதல் முறையாக பாரதிராஜா படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்ததும் இந்த படத்தில்தான்.
பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் விஜயகுமார், ராதிகா, விக்னேஷ் என குணச்சித்திர நடிகர்களை வைத்து புதுக் கதாசிரியரான ரத்தினகுமார் என்பவர் எழுதிய கதையை இயக்கினார். படம் வெளியாகும் போது பலருக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகும் என்ற நம்பிக்கையில்லை.
ஆனால் வெளியான போது அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கடன் தொல்லையில் இருந்து மீள கிழக்குச் சீமையிலே படம்தான் தனக்கு உதவியது என தாணு கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாரதிராஜாவுக்கும் ஒரு கம்பேக் படமாக கிழக்குச் சீமையிலே அமைந்தது.
அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரஹ்மானுக்கு கிராமத்துப் படங்களுக்கு எல்லாம் இசையமைக்க தெரியுமா, பாரதிராஜா ரிஸ்க் எடுக்கிறார் என்ற ஏளனங்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக அமைந்தது கிழக்கு சீமையிலே பட பாடல்கள்.
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…
சம்பவத்தின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அகர்வால் எரிபொருள் நிலையத்திற்கு வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ…
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…
ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…