CINEMA
எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை.. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த திரை பிரபலங்கள்..!!
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த திரைப் பிரபலங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
எம்.ஜி.ஆர்:
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் எம்ஜிஆர். பாரத ரத்னா, பாரத், அண்ணா விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விடுதலை தன்வசம் படுத்தினார். எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர், புரட்சி நடிகர், மக்கள் நடிகர், மக்கள் கலைஞர், கலை மன்னர், கலை வேந்தர் உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். ஆனால் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று அரசியல் கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.
ரஜினிகாந்த்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். மேலும் 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என கூறினார். அதன் பிறகு யாரும் எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகி விட்டார். ரசிகர்கள் போராட்டம் நடத்தியும் தனது முடிவிலிருந்து மாறாமல் அப்படியே இருந்து விட்டார்.
கமல்ஹாசன்:
உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கமல்ஹாசன் அவரது கட்சி மூலம் சமூக நீதி சிறு திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்தினார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.
விஜயகாந்த்:
பிரபல நடிகரான விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரசிகர் மன்றத்தின் மாநில தலைவராக இருந்த ராமு வசந்தனை தனது கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக வேலை பார்த்தார். 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி கட்சிகள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்தது.
மன்சூர் அலிகான்:
மன்சூர் அலிகான் முதலில் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்தார். 17 வது நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ஜனநாயக புலிகள் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.
விஜய்:
முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். வருகிற 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. விஜய் அரசியல் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இதனால் அவர் வெற்றி பெறுவாரா இல்லை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.