அட கடவுளே… புல்லட்டைத் தூக்கி வீசிய ஸ்கார்பியோ கார்… நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நடந்த கோர விபத்து… சம்பவ இடத்திலேயே இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

By Swetha on ஆவணி 25, 2026

Spread the love

டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலை-58 இல், பார்லாவைச் சேர்ந்த 36 வயதான ஜாவேத் என்பவர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு தனது புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​அவர் நெடுஞ்சாலை வெட்டுப்பகுதியைக் கடக்க முயன்றபோது, ​​அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்து அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. விபத்தின் தாக்கத்தால் தூக்கி வீசப்பட்ட ஜாவேத், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

https://twitter.com/AnuragChaddha/status/2091879002445328453/video/1

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஜாவேடின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ஸ்கார்பியோ கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.