சிவகங்கை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர், தனது கணவர் மூலமாகத் தொகுதியிலுள்ள டாஸ்மாக் பார்கள், குவாரிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் சட்டவிரோத வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதுமட்டுமன்றி, புதிதாகக் கட்சியில் இணைந்துள்ள உறுப்பினர்களிடம் கட்சியின் பொதுச்செயலாளரிடம் பேசி முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வாங்கித் தருவதாகக் கூறிப் பேரம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு, தனது கணவரின் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற அடாவடி வசூல் மற்றும் பேரங்களில் ஈடுபடுவது, அப்பகுதியிலுள்ள கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
