“வண்டியை திருப்பிட்டு போடா” கெத்து காட்டிய மூதாட்டி… நடைபாதையில் புகுந்த ஸ்கூட்டியைத் தடுத்து நிறுத்தி ‘மாஸ்’ காட்டிட்டாங்களே.. இணையத்தில் குவியும் பாராட்டு..!

By Soundarya on மாசி 13, 2026

Spread the love

கோழிக்கோட்டில் நடைபாதையில் அத்துமீறி நுழைந்த ஸ்கூட்டி ஓட்டுநரை ஒரு முதியவர் தடுத்து நிறுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஒரு ஸ்கூட்டி ஓட்டுநர் விதிகளை மீறி நடைபாதையில் (Footpath) வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மூதாட்டி , ஸ்கூட்டிக்கு முன்னால் உறுதியாக நின்று வழிவிட மறுத்தார். ஓட்டுநர் எவ்வளவோ கேட்டும், அவர் நகராமல் நின்று, ஓட்டுநரை மீண்டும் பிரதான சாலைக்கே திரும்புமாறு கட்டாயப்படுத்தினார்.

ஓட்டுநர் வேறு வழியின்றி தனது ஸ்கூட்டியைத் திருப்பிச் சாலைக்கே கொண்டு சென்றார். இந்த முழு காட்சியும் பின்னாலிருந்த காரின் கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியானது. சட்டத்தையும் பாதசாரிகளின் உரிமையையும் நிலைநாட்டிய அந்த மோதட்டியின் துணிச்சலை நெட்டிசன்கள் “ரியல் ஹீரோ” என்று பாராட்டி வருகின்றனர்.