விஞ்ஞானிகள் இரவில் மிளிரும் மின்மினி பூச்சிகளை பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இரவு நேரங்களில் மின்மினி பூச்சிகள் ஒளிருவதை பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கும். கோடை காலம் வந்துவிட்டது என்பதை அந்த பூச்சிகள் ஒளிர்வதை வைத்து தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இரவில் மின்மினி பூச்சிகள் ஒளிர்வதை பார்ப்பது அரிதாகிவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
அதாவது ஒளி மாசுபாடு, பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் போன்றவற்றின் காரணமாக இவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது, இந்த காரணத்தால் இரவில் மின்மினி பூச்சிகளை பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்,
