பொதுவாகவே பெண்களை பொறுத்தவரையில் தங்கத்தின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். தங்கம் என்ற வார்த்தையை கேட்டாலே ஏதாவது ஒரு ஈர்ப்பு ஏற்படும். அதனால்தான் சாதனையின் சின்னங்களாகவும் பெருமதியின் உச்சத்திலும் எப்போதும் தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது. தங்கம் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்ற உண்மை உங்களில் யாருக்காவது தெரியுமா? தங்கம் சரும அழகை மேம்படுத்துவதிலும் இளமையை தக்க வைப்பதிலும் ஆற்றல் காட்டுவதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால்தான் சரும பராமரிப்பு தயாரிப்புகளிலும் தங்கம் பெரிய அளவில் பிரபலமாக உள்ளது. தங்கத்தை பெரும் அழகுக்காக மட்டும் அணிவதில்லை. தங்கத்தை எந்த பாகத்தில் அணிகிறோமோ அதற்கு ஏற்ற வகையில் ஆரோக்கிய நன்மைகளும் கொடுக்கும்.
காதணிகள்:
தங்க காதணிகளை அணிவது உங்களுடைய கண்களில் ஏற்படும் உராய்வை குறைத்து உங்கள் பார்வையை மேம்படுத்தும் என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஏனென்றால் காதில் உள்ள நரம்புகள் கண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்க காதணி அணிவது உங்களுடைய பார்வையை கூர்மைப்படுத்துவதில் ஆற்றல் மிக்கது.
மோதிரம்:
தங்க மோதிரம் என்பது அனைவராலும் விரும்பப்படுகிறது. அறிவியல் ஆய்வுகளின் படி தங்க மோதிரத்தை குறிப்பாக மோதிர விரலில் அணிவது பல நன்மைகளை கொடுக்கும். ஏனென்றால் அதில் மூளை வரை செல்லும் ஒரு நரம்பு உள்ளது. இது மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிட உதவுகின்றது.
மூக்குத்தி:
தங்கத்தில் மூக்குத்தி அணிவதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலி குறையும் என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இது குழந்தை பிரசவ வழியில் போதும் நிவாரணம் அளிக்கிறது.
தங்க நெக்லஸ்:
தங்கத்தை கழுத்தில் அணிவதால் இதை ஆரோக்கியம் மேம்படும். தங்க நெக்லஸ் அணிவது உங்களுடைய உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை வெகுவாக குறைகின்றது.
தங்க வளையல்கள்:
தங்கத்தில் வளையல் அணிவதன் மூலமாக உடலில் சில மின்காந்த ஆற்றல்களை தக்க வைத்துக் கொள்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
இடுப்பு ஆபரணம்:
தங்கத்தை இடுப்பில் ஆபரணமாக அணியும் போது மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் வலியை குறைக்கவும் உதவும். தெற்கு ஆசியாவில் பல பெண்கள் தங்க இடுப்பு பட்டைகளை அணிவதற்கான முக்கிய காரணமும் இதுதான். அது மட்டுமல்லாமல் உடலில் தங்கத்தை எந்த பாகத்தில் அணிந்தாலும் அதன் காந்த ஆற்றல் சரும அழகை மேம்படுத்துவதுடன் இளமையை பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது.
