வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் கடந்த வராம ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்திற்கான மழை விடுமுறையை ஈடுசெய்வதற்காக நாளை பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நாளை பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் இதேபோல அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
