தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வட தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் விலகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் மாலை தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. நேற்று காலை அது மேலும் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. இதில் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பை இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
