திருநெல்வேலியில் நள்ளிரவு நேரத்தில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 15 வயது பள்ளி மாணவியை மிரட்டி, நகைகள் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்ற வழக்கில் இளைஞர் மற்றும் சிறுவன் உட்பட இருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொண்ட கும்பல், மாணவியை அச்சுறுத்தி அவரிடமிருந்த 4 கிராம் தங்கச் சங்கிலி, 2 கிராம் தோடு மற்றும் அவரது நண்பரின் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது. பாதிக்கப்பட்ட தரப்பினர் அச்சத்தால் புகார் அளிக்கத் தயங்கிய சூழலில், காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நெல்லை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
தீவிர விசாரணையில் மானூர் அருகேயுள்ள தென்பத்து பகுதியைச் சேர்ந்த 26 வயதான சுரேஷ் என்பவரும், அவருடன் சேர்ந்து இரு சிறுவர்களும் இக்குற்றச் செயலில் ஈடுபட்டது அம்பலமானது. இதனையடுத்து சுரேஷ் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவனைப் பிடித்த போலீசார், அவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக இருந்த மற்றொரு சிறுவன் ஏற்கனவே வேறொரு குற்ற வழக்கில் சிக்கி அரசுக் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரிடமும் சட்டப்படி விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…
புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…