புளோரிடா மாகாணம் செலிப்ரேஷனில் உள்ள ‘கிரியேஷன் வில்லேஜ் வேர்ல்ட்’ என்ற புகழ்பெற்ற கிறிஸ்தவப் பள்ளியில், 6 வயது சிறுமி ஒருவர் சக மாணவரால் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளி இடைவேளையின் போது பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 14,000 டாலர் வரை அதிக கட்டணம் வசூலிக்கும் இப்பள்ளியில், தன் மகளைப் பாதுகாக்கத் தவறிய நிர்வாகத்தின் மீது மழலையர் பள்ளி மாணவியின் பெற்றோர் கடந்த மார்ச் மாதம் வழக்குத் தொடுத்துள்ளனர். இக்கொடூரச் செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் கடுமையான தலைவலி, வயிற்று வலி மற்றும் மீண்டும் மீண்டும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அச்சிறுமி பள்ளிக்குச் செல்ல மறுத்ததோடு, தங்களுக்கு ஏதேனும் புற்றுநோயோ அல்லது மூளைக்கட்டியோ இருக்குமோ என்று அஞ்சியதாகவும், தொடர் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே இக்கொடுமை வெளிச்சத்திற்கு வந்ததாகவும் குழந்தையின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பெற்றோரிடம் விவரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்கள் இப்புகாரைப் பள்ளி நிர்வாகத்திடம் கொண்டு சென்றனர். ஆனால், பள்ளி நிர்வாகம் அதற்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாக, அடுத்த மாதமே அந்தச் சிறுமியைப் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், கடந்த மே மாதம் அக்குடும்பத்தின் மீது பள்ளி நிர்வாகம் ஒரு எதிர் வழக்கையும் தொடுத்துள்ளது. அதில், பெற்றோரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், குழந்தைகளின் உடலுறவுத் தொடர்பு “தற்செயலானது” மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு “பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதற்கான வளர்ச்சித் திறன் இல்லை” என்றும் மூர்க்கத்தனமாக வாதிட்டுள்ளது. மேலும், பெற்றோர் குழந்தைக்கு முறையான சுகாதாரம் மற்றும் கழிவறைப் பழக்கங்களைக் கற்றுத் தராததே சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகளுக்குக் காரணம் என்றும், இக்குற்றச்சாட்டுகளால் பள்ளியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஈவிரக்கமின்றித் தெரிவித்துள்ளது.
இதனால் பெரும் மனமுடைவுக்கு ஆளாகியுள்ள சிறுமியின் பெற்றோர், பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பள்ளி இடைவேளையின் போது மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்காமல், ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன் எப்போதும் மும்முரமாக இருந்ததாக அவர்கள் சாடியுள்ளனர். மேலும், பள்ளியில் நடக்கும் விஷயங்களை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறக் கூடாது என்ற “யாரிடமும் சொல்லக்கூடாது” என்ற விசித்திரமான கொள்கையை இப்பள்ளி கடைப்பிடித்துவந்ததாகவும், அதுவே இக்கொடுமை இத்தனை காலம் வெளியில் தெரியாமல் போனதற்குக் காரணம் என்றும் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…
தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…