தீபாவளி விடுமுறையை கவனமாக கொண்டாட வேண்டும் எனவும் பட்டாசு வெடிப்பதில் கவனம் தேவை எனவும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கூட்டமான தெருக்கள், சாலைகளில் பட்டாசு வெடிக்க வேண்டாம். பெற்றோர் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். மூடிய பெட்டிகள் மற்றும் பாட்டில்களில் வைத்து வெடிக்கக்கூடாது. குடிசைகள் அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
